ETV Bharat / state

புதிய மீன்வள வரைவு மசோதா: கருத்துக்கேட்பு கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்த மீனவர்கள் - ராமநாதபுரம் மீனவர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம்: தேசிய மீன்வள சட்டத்திருத்த வரைவு மசோதா குறித்து ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தைவிட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ramanathapuram fishermen walkout
author img

By

Published : Sep 18, 2019, 12:22 PM IST

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 'தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா- 2019' குறித்த கருத்து கேட்புக் கூட்டம் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் சேசு, அருள், எம். கருணாமூர்த்தி, ஆனந்த் உள்ளிட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள், பாரம்பரிய மற்றும் விசைப்படகு மீனவர்கள் கலந்துகொண்டனர் .

'மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வரைவு சட்டத்தின்படி 12 கடல் மைல் தூரத்திற்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்தப் புதிய சட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், பாரம்பரிய மீன்பிடித்தொழில் அழிந்துபோகும்' எனத் தெரிவித்து கூட்டத்தில் எழுந்து கூச்சலிட்டனர்.

வெளிநடப்பு செய்த மீனவர்கள்

மேலும், இந்தச் சட்டத்தை மீனவர்கள் ஏற்கத் தயாராக இல்லை எனவும், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மீன்பிடிச் சட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, இக்கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யாமல், திடீரென கூட்டத்தைக் கூட்டியிருப்பதாக அதிருப்தி தெரிவித்த மீனவர்கள் அங்கிருந்து வெளிநடப்புச் செய்து, மீன்வளத் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:இராமநாதபுரம்
செப்.16
தேசிய கடல் வள மேலாண்மை சட்டம்2019
கருத்துகேட்பு கூட்டத்தை மீனவர்கள் புறக்கணிப்பு செய்தனர்Body:மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம்
மாலை ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் சேசு, அருள், எம்.கருணாமூர்த்தி, ஆனந்த் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பாரம்பரிய மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர் .

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வரைவு சட்டத் தின்படி 12 கடல் மைல் தூரத்திற்குள் மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த புதிய சட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், பாரம்பரிய மீன்பிடி தொழில் அழிந்து போகும் என தெரிவித்து கூட்டத்தில் எழுந்து கூச்சலிட்டனர். மேலும் இந்த சட்டத்தை மீனவர்கள் ஏற்க தயாராக இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மீன்பிடி சட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கூறினர். மேலும் இக்கூட்டம் குறித்து மீன்வளத்துறை அலுவலகத்தில் முறையான அறிவிப்பு செய்யாமல், திடீரென கூட்டத்தை கூட்டி அதன் முடிவுகளை அரசுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததாக கூறி, மீனவர்கள் வெளிநடப்பு செய்து, மீன்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.