ETV Bharat / state

மீன்களை உலர்த்த களம் அமைத்துத் தரக் கோரிக்கை - மீனவர்கள் கோரிக்கை

பாம்பனில் மீன்களை உலர்த்தி கருவாடாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுவரும் நிலையில் உலர் களம் ஒன்று அமைத்துத் தருமாறு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மீன்களை உலர்த்தும் மீனவர்கள்
மீன்களை உலர்த்தும் மீனவர்கள்
author img

By

Published : Sep 4, 2021, 10:44 AM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வரத்து அதிகமாகக் கிடைத்துவருகிறது.

தற்போது, பாம்பன் கடற்கரை ஓரத்தில் மீன்களை வெயிலில் கருவாடாக உலர்த்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். மீன்களை கடற்கரை ஓரத்தில் கோணிச் சாக்குகளை விரித்து, அதன் மீது உலர்த்தப்பட்டுவருவதால் மீன்கள் கருவாடாக மாறுவதற்கு அதிகமான நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

மீன்களை உலர்த்தும் மீனவர்கள்

அரசுக்கு கோரிக்கை

ஆதலால் கருவாடு உலர்த்துவதற்கு உலர் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சுருக்குமடி வலை பிரச்னையை தீர்க்க அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.