ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த கருப்பையா கடந்த 24ஆம் தேதி சத்திரக்குடி அருகே நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, சத்திரக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அலுவலர்கள் இணைந்து உயிரிழந்த சார்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு உதவ முன் வந்தனர்.
அவ்வாறு அவர்கள் இணைந்து அளித்த ஐந்து லட்சத்து 62 ஆயிரத்து 700 ரூபாய் நிதியை, அம்மாவட்டக் காவல் துறை அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கார்த்திக் கருப்பையாவின் மனைவி, மகனிடம் வழங்கினார். இதையடுத்து நிதியுதவி அளித்த காவலர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோயிலில் கைவரிசை காட்டிய நபருக்கு போலீஸார் வலைவீச்சு