ராமநாதபுரம்: கவரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி கோகுல்நாத். இவருக்கு பாப்பாகுடியை சேர்ந்த ராதிகா என்பவருடன் திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, பிறந்து நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், அவரது மனைவி ராதிகா பாப்பாகுடியிலுள்ள தாய் வீட்டில் இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோபிநாத்தின் தந்தை ராமையாவிற்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக அவரை கோகுல்நாத் பார்த்துக்கொண்டார். இதனையடுத்து கோகுல்நாத்துக்கும் சமீபத்தில் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
![death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-03-father-dead-in-covid-without-see-his-new-born-baby-pic-script-tn10040_22062021165639_2206f_1624361199_1038.jpg)
அங்கு அவருக்கு குணமாகததையடுத்து கோகுல்நாத்தை அவரது உறவினர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கும் கோகுல்நாத்தின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. கரோனா தாக்கத்தால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோகுல்நாத்தை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோகுல்நாத் தனக்கு இரண்டாவதாக பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்காமல் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கோகுல்நாத் குடும்பத்துக்கு அரசு அறிவித்துள்ள உதவித்தொகை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளம் காதல் ஜோடிகள் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்