கமுதியை அடுத்துள்ள நரியன்சுப்புராயபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி குருசாமி (77). இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
கமுதி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்தச் சூழலில் கடந்த வியாழக்கிழமை குருசாமியின் ஓட்டு வீடு இரவு நேரத்தில் இடிந்து விழுந்தது. இதில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையறிந்த கமுதி வட்டாட்சியர் செண்பகலதா உள்ளிட்ட வருவாய் துறையினர், அபிராமம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து பேரிடர் நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க... யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: யானை கவலைக்கிடம்