ETV Bharat / state

200 கிலோ கடல் அட்டையை பிடித்த 11 பேர் கைது!! - கடல் அட்டைகள்  கடலில் விடப்பட்டது

ராமநாதபுரம் : மண்டபம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பிடித்த 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

sea_cucumber_seize
author img

By

Published : Sep 22, 2019, 3:51 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று மண்டபம் கடல் பகுதியில் கடல் அட்டைகளை சிலர் பிடிப்பதாக மண்டபம் கடலோரக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக தென்பட்ட இரண்டு விசைப்படகுகளை சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை 200 கிலோ இருந்தது தெரியவந்தது.

கடலில் விடப்பட்ட கடல் அட்டை

இதனைத் தொடர்ந்து விசைப் படகில் வந்த 11 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

Intro:இராமநாதபுரம்
செப்.22

மண்டபம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த 11 பேர் கைது, 200கிலோ அட்டை, 2 விசைப்படகுடன் பறிமுதல்.
Body:இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பிடிக்க அரசு தடை விதித்ததுள்ளது.
ஆனால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்து வெளிநாடுகளுக்கு உயிருடனும், பதப்படுத்தப்பட்டும் அனுப்புவது தொடர்ந்து வருகிறது.
இன்று மண்டபம் கடல் பகுதியில் கடல் அட்டைகளை சிலர் பிடிப்பதாக மண்டபம் கடலோரக் காவல்துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் மண்டபம் கடல் பகுதியில் சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு இடமாக தென்பட்ட இரண்டு விசைப்படகுகளை சோதனையிட்ட போது அதில் 200 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டை பிளாஸ்டிக் கேன்களில் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விசைப் படகில் வந்த 11 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய படகுகளை பறிமுதல் செய்தனர்.
கடல் அட்டைகள் உயிருடன் இருந்ததல் இராமேஸ்வரம் உரிமையியல் மற்றும் நீதித்துறை பொறுப்பு நீதிபதி ஆர் இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கடலில் விடப்பட்டது. கைது செய்யப்பட்ட 11 பேர் மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.