ETV Bharat / state

சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

dmk stil against gas cylinder price high
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!
author img

By

Published : Dec 21, 2020, 10:42 PM IST

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை, எளிய மக்களின் வாழ்வை நேரடியாக இது பாதித்துள்ளதாகவும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை முன்பாக திமுக மகளிரணி சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி துணை தலைவி பவானி ராஜேந்திரம் தலைமையில், நடைபெற்ற 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சி: திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மண்டல பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். திமுக துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

dmk stil against gas cylinder price high
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திமுக மகளிர் அணி சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லதா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் குத்தாலம் கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நாகை: நாகை அவுரி திடலில் திமுக மகளிர் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கௌதமன் தலைமை தாங்கினார். 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில், நடைபெற்ற போராட்டத்தில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்களூர் பழனிசாமி, மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் மீனா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பூஜை நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். 15 நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட துணை செயலாளர் சம்பத் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச் செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை: ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், திமுக ஆட்சியில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்தும், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களும் பட்டியலிட்டு திமுக கட்சி நிர்வாகிகள் பேசினார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதை திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும் திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கா. பொன்முடி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கலந்து கொண்ட மகளிரணி நிர்வாகிகள் ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

வேலூர்: வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுக மகளிர் அணி அமைப்பாளர் வாசுகி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்சி, விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் எ.பி. நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆனைமலை, பொள்ளாச்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ஆயிரம் கோடி பேரம்'- தயாநிதி மாறன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.