ETV Bharat / state

ராமநாதபுரம் தொகுதி: 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி! - தமிழ்நாடு தேர்தல் முடிவு

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.

திமுக வெற்றி
Dmk win
author img

By

Published : May 3, 2021, 9:16 AM IST

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் 32 சுற்றுகள் முடிவில் மொத்தமாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 75 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் குப்புராமு 60 ஆயிரத்து 763 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கண் இளங்கோவன் 17 ஆயிரத்து 62 வாக்குகளையும். சுயேட்சை வேட்பாளர் மலைச்சாமி 10 ஆயிரத்து 845 வாக்குகளையும், அமமுக சார்பாக போட்டியிட்ட முனியசாமி 6 ஆயிரத்து 776 வாக்குகளையும், மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சரவணன் 1,996 வாக்குகளை பெற்றனர்.

இதன் மூலம் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் 50,362 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அதற்கான சான்றிதழை பெற்றார்.

இதையும் படிங்க: குமரியில் அபார வெற்றி: தந்தை கனவை நனவாக்கத் தயாராகும் விஜய் வசந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.