-
#Live: இராமநாதபுரத்தில் தென்மண்டல BLA-2 பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் தலைமையுரைhttps://t.co/3AL9pN0KBx
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Live: இராமநாதபுரத்தில் தென்மண்டல BLA-2 பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் தலைமையுரைhttps://t.co/3AL9pN0KBx
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023#Live: இராமநாதபுரத்தில் தென்மண்டல BLA-2 பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் தலைமையுரைhttps://t.co/3AL9pN0KBx
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023
ராமநாதபுரம்: வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election 2024) நெருங்கும் சூழலில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தங்களது வியூகங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக முதன் முறையாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.
இந்த பயிற்சி பாசறைக்கூட்டத்தை கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் கட்டமாக திருச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதாவது மக்களவை தேர்தலில், சமூக வலைதளம் மூலம் நடைபெரும் அரசியல் எதிரிகளின் பொய் பிரச்சாங்களை தடுக்கவும், வீட்டு வாசல் மற்றும் தெருமுனைக் கூட்டம் மூலம் வாக்காளர்களைச் சந்திக்கவும் திமுக பூத் ஏஜெண்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பூத் ஏஜெண்டுகளுக்கு பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான முதல் பயிற்சிக் கூட்டம் திருச்சியில் ஜூலை 26 ஆம் தேதி நடைபெற்றது. அதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அந்த பயிற்சி பாசறைக்கூட்டத்தில் டெல்டா மண்டலங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மத்தியம், தஞ்சை தெற்கு, திருச்சி மத்தியம், தெற்கு மற்றும் வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 15 மாவட்டங்களில் இருந்தும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொன்றனர்.
திமுக சார்பில் வெளியான அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, மண்டல் வாரியாக 5 இடங்களில் 1 நாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது முதற்கட்டமாக டெல்டா / மத்திய மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக்கூட்டம் திருச்சியில் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்பயிற்சி முகாமில், 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக தென் மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளார்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று ( ஆக.17) இராமநாதப்புரத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் சுமார் 19 கழக மாவட்டங்களில் இருந்து 16 ஆயிரத்து 978 வாக்குச் சாவடு பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தென்மண்டல பூத் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை முக்கிய அறிவிப்பு: ராமநாதபுரத்தில் 20,000 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 19 கழக மாவட்டங்களில் இருந்து மகளிர் உட்பட 16 ஆயிரத்து 978 பேர் சீருடை அணிந்து பயிற்சி பெறுகின்றனர். இதில் கலந்து கொள்ள அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் பாசறையில் 5 வகுப்புகள் எடுக்கப்படுகிறது. அதில் 11 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பயிற்சி பாசறையின் இறுதியாக இன்று மாலை முதலமைச்சர் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, அரசின் நலத்திட்டங்கள் புத்தகங்களாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. முக்கியமாக வருகைப்பதிவு கணக்கு எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
19 கழக மாவட்டங்கள்: இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு, தேனி வடக்கு மற்றும் தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு மற்றும் தெற்கு, விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு, தென்காசி வடக்கு மற்றும் தெற்கு, திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய பகுதி, தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய மாவட்டங்கள் கலந்து கொள்கின்றனர்.