தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.
போட்டிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டு நடந்தன. ஆண், பெண் இருபாலருக்கும் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி, தடகளப் போட்டிகள், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது என்பதால் அனைத்து வயதினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
இதில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க:
'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து