ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி. ஜெயலலிதா ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. மக்கள் வாக்களித்து மூன்றாண்டுகள் கடந்து இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலையும் எங்கள் பக்கம் உள்ளது. மக்களும் அதிமுக ஆட்சி பக்கம் உள்ளனர்.
அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சி தொடர்ந்து அடுத்தமுறையும் அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்' என அவர் தெரிவித்தார்.