ராமநாதபுரம்: மாவட்டம், மன்னார் வளைகுடாவில் நேற்று (அக்.10) முதல் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக பச்சை நிறத்துடன் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதன் காரணமாக கீழக்கரை கடற்கரையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனடியாக மீன்களை அப்புறப்படுத்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கீழக்கரை கடல் பகுதியில் இன்று (அக்.11) காலை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை ஓரங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன.
செத்து கரை ஒதுங்கும் மீன்கள்
இந்த மாற்றமானது, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம். சில நாள்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாள்களுக்கு மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!