ETV Bharat / state

கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்கிய மீன்கள்!

author img

By

Published : Oct 19, 2019, 9:53 PM IST

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கியது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fish

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள கோதண்டராமர் கோயில் அருகிலுள்ள கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள் இப்பகுதியிலிருந்து கடல் நீர், இறந்த மீன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

அதிகப்படியான வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் வெளியேறுவதால், கடல் நீரில் வெப்பம் அதிகரித்து மீன்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மீன் வளத்துறை அலுவலர் கூறுகையில், 'கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்ததே மீன்கள் இறந்து கரை ஒதுங்கக் காரணம். பொதுவாக மீன்கள் 32 டிகிரி அளவிலான வெப்ப நிலையைத் தாங்கக் கூடியவை. நன்னீரில் வாழும் மீன்கள் மழைநீர் தேடி முன்னேறி வரும்போது நீரின் வெப்பம் தாங்காமல் உயிரிழந்துள்ளது' என்றார்.

இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

மேலும், மீன்கள் உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறந்து கரை ஒதுங்கிய மீன்களை அள்ளும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவற்றை சேகரித்து விற்கக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திடீரென இந்தளவிற்கு மீன்கள் இறந்து மிதப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலை வனம்போல் காட்சியளிக்கும் கிராமம்: குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

Intro:இராமநாதபுரம்

அக்.19

இராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு.Body:

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் இடது புறத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில் சுற்றிலும் ஒருபுறம்கடலும் மறுபுறம் மழைநீரால் சூழ்ந்து நிற்கக்கூடிய ஆற்றுப் பகுதியாக இருக்கின்றது. இந்நிலையில் ஆற்றுப் பகுதியில் இருந்த நீரின் வெப்ப அளவு அதிகமாகி விட்டது. இதனல், ஆயிரக்கணக்கான மீன்கள்
இறந்து கடலில் மிதந்தனர். இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து மீன்களை கடலில் இருந்து அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மீன் இறப்புக்கான காரணம் குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,

இராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் வெப்பத்தின் தன்மை அதிகரித்ததன் காரணத்தினாலே மீன்கள் உயிரிழந்து இருக்கின்ற, 1.5 எடை இருக்கும் இது ஆண்டுதொறும் நடை பெறும் நிகழ்வு என்று நன்னீரில் வாழும் மீன்கள் மழைநீர்
தேடி முன்னேறி வரும்போது நீரின் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது என்றார். மத்திய கடல் வள ஆராய்ச்சி மையத்தில் இருந்து சில மீன்களை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம்
கடல் பச்சை நிறத்தில் மாறியது இதற்க்கு
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 'ஆல்கல் புளூம்' எனும் கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். கண்ணுக்குத் தெரியாத அளவில் வளரும் இந்தக் கடல் பாசியை 'பூங்கோரை' என மீனவர்கள் அழைப்பது வழக்கம். முழுமையான வளர்ச்சியடைந்த இந்தப் பாசிகள் கடலோரத்தில் ஒதுங்கியதால் கடல் நீரின் நிறம் மாறியிருக்கலாம். மேலும், இந்தப் பாசிகள் படரும் பகுதிகளில் வாழும் சிறு மீன்கள் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனத் விஞ்ஞானிகள் கூறினர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.