ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கனரா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உள்ளார்.
சென்ற மாதம் வாடிக்கையாளர் ஒருவர் நகைகளைத் திருப்பித் தர மணிகண்டன் மறுப்பதாக வங்கி உயர் அலுவலரிடம் புகாரளித்தார். உடனே மணிகண்டன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மணிகண்டன் வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடியுள்ளார்.
இச்சம்பவம் வங்கி உயர் அலுவலருக்குத் தெரியவர மணிகண்டனை பணியிடை நீக்கம்செய்தார்.
பின்னர் வங்கியில் நகை அடைமானம் வைத்த சிலர் நகைகளைத் திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு வங்கி நிர்வாகம் காலதாமதம் செய்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று (ஆக. 26) வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, வாடிக்கையாளர்கள் 107 நபர்களின் நகைகளை மணிகண்டன் திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 90 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வாடிக்கையாளர்களிடம் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து நகைகளைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தனர். அதனடிப்படையில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: கடன்கொடுக்க மறுத்த வங்கி முன்பு நூதன போராட்டம்!