ETV Bharat / state

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் - Rameshwaram tourist places resume

ராமநாதபுரம் : ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து கடவுள் தரிசனம் செய்தனர்.

Curfew relaxation Devotees congregate at Rameswaram

author img

By

Published : Sep 13, 2020, 6:07 PM IST

காரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறம் இருந்து வந்தாலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அண்மையில் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது.

இதனையடுத்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரத்தின் முக்கியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் குவிந்துள்ளனர்.

மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து கடவுள் தரிசனம் செய்து வருகின்றனர். தீர்த்த நீராடுவதற்கும், அக்னி தீர்த்தக் கடற்கரையில் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், கடவுள் தரிசனம் மட்டுமே செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி கோயிலின் நுழைவுப்பகுதியில் காவல் துறையினரும், கோயில் ஊழியர்களும் பக்தர்களுக்கு முறையான பரிசோதனை செய்து, கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.