ETV Bharat / state

மனைவியை அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள்! மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - lifetime

ராமநாதபுரம்: மனைவியை அடித்து கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Court award lifetime prison to husbend killed wife
author img

By

Published : Jul 31, 2019, 6:37 AM IST

ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் காளீஸ்வரன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், புஷ்பவள்ளிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரிக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே கடந்த 2010ல் தொடர்பு ஏற்பட்டது.

இதை மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 2012 மே 26ல் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த காளீஸ்வரன், உருட்டு கட்டையால் மனைவி புஷ்பவள்ளியை தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த புஷ்பவள்ளி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிந்து, காளீஸ்வரனை கைது செய்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோரஞ்சிதம் ஆஜரானார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி காளீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை. 30

மனைவியை அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.Body:
ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் காளீஸ்வரன், ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பவள்ளிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. ராமநாதபுரத்தில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்த முனீஸ்வரிக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே கடந்த 2010ல் தொடர்பு ஏற்பட்டது. இதை மனைவி கண்டித்ததால் புஷ்பவள்ளிக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இது குறித்து போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்தார். இது தொடர்பாக கடந்த 2012 மே 26ல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரன், உருட்டு கட்டையால் மனைவி புஷ்பவள்ளியை தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த புஷ்பவள்ளி உயிரிழந்தார். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து, காளீஸ்வரனை கைது செய்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோரஞ்சிதம் ஆஜரானார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. காளீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.