கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய தேர் பவனி திருவிழா வரும் 6, 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ள 77 விசைப்படகுகளில் 2,059 ஆண்கள், 476 பெண்கள், 44 ஆண் குழந்தைகள், 36 பெண் குழந்தைகள், 25 நாட்டுப்படகுகளில் 333 ஆண்கள், 34 பெண்கள், 10 ஆண் குழந்தைகள், 12 பெண் குழந்தைகள் என மூன்றாயிரத்து நான்குபேர் செல்ல உள்ளனர்.
இத்திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட படகுகளின் உறுதித் தன்மை, நீளம், அகலம், உரிமம், உயிர் காக்கும் சாதனங்கள் உள்ளிட்டவை குறித்து பாம்பன் வடகடல் பகுதியில் ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு