நாட்டில் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வைரஸால் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், ராமநாதபுரத்தில் 86 பேர் கரோனா வைரசால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு கரோன தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையடுத்து, சுகாதாரத் துறையினர் மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தினர். மருத்துவமனைக்கு வெளி நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை நோயாளிகளை குறைந்த மருத்துவ ஊழியர்கள் கொண்டு சிகிச்சையளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.