ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் உள்ள எஸ்.எம். காலனியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இந்த நரிக்குறவர்கள் கைவினைப் பொருட்களை பலவற்றைத் தயாரித்து, அருகில் உள்ள ராமநாதபுரம் நகரப் பகுதிகளில் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தற்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உச்சிப்புளி எஸ்.எம். காலணியில் உள்ள நரிக்குறவர்கள் தங்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த கிராம மக்களுக்கு, உச்சிப்புளி தனிப்பிரிவு காவலர் முரளிகிருஷ்ணன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் சின்னக்கடையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான ஹமீது அலி, நூருல் ஜன்னத் ஆகியோரின் பொருளுதவியுடன் சார்பு ஆய்வாளர் கணேசன் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 12 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: மக்களை ராகுல்காந்தி குழப்புகிறார் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் சாடல்!