ETV Bharat / state

கோடாங்கி வேடத்தில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகக் கலைஞர் - கரோனா விழிப்புணர்வு

ராமநாதபுரம்: கோடாங்கி வேடமிட்டு ராமநாதபுரம் வட்டார வழக்கில் பேசி கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாடகக் கலைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோடாங்கி வேடத்தில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகக் கலைஞர்

author img

By

Published : Apr 8, 2020, 6:23 PM IST

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படிக்காத பாமரர் முதல் படித்தவர்கள் வரை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், கரோனா குறித்த விஷயங்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா நோய் தாக்கத்தின் அச்சம் குறித்தும் நாடகக் கலைஞர் ஒருவர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ராமநாதபுரத்தை அடுத்த திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓரங்க நாடக கலைஞரான ராஜேந்திரன், கரோனா விழிப்புணர்வை மக்களிடையே தெருக்கூத்து வழியாக ஏற்படுத்தி வருகிறார். தற்போது கரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்விற்காக கோடாங்கி போன்று வேடமிட்டு, 'குறி' சொல்வதுபோல தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோடாங்கி வேடத்தில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகக் கலைஞர்

"அமெரிக்கா அலறுதடா

தமிழ்நாடு தத்தளிக்குதடா

என்னாலயும் காப்பாத்த முடியாது

அந்த சாமியாலயும் காப்பாத்த முடியாது.,

வீதிக்கு வராதடா,விதியும் முடியுமடா. கரோனா மோசமடா.,

அது கும்பிட்டாலும் போகாதடா

ஊரடங்கு உத்தரவடா அது உன் உசுர காக்குமடா

வீட்டுக்குள்ள இருந்துட்டா நீ விதிய வெல்லுவடா.,

போலீசுக்கும் தூக்கமில்ல,

அதப்புரிஞ்சி நடந்துக்கடா,

பாரதப்பிரதமரும் பாதந்தொட்டு கெஞ்சுராரு.,

நம்ம முதலமைச்சரும் நமக்காக வேண்டுராரு

கரோனா மோசமடா உன் குலத்தையே அழிக்குமடா

உன் உசுரு உங்கையில ஒதுங்கி நடந்துக்கடா

ஊரங்கு உத்தரவ மதிச்சாக்கா உன் உசுரு பொழைக்குமடா"

என ஆவேசமாக, இப்பகுதி வட்டார வழக்கில் அவர் பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.