ராமநாதபுரம்: லாந்தை அருகே கருங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் 100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட இதரப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கு வழங்கப்படும் அரிசியானது புழு, பூச்சிகளுடன் மிகவும் தரமற்று, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக அலுவலர்கள் ஆய்வு செய்து, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வண்டல் மண்ணை அரசியல்வாதிகள் கடத்துகிறார்கள்: விவசாயிகள் குற்றச்சாட்டு