ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் பட்டிணம்காத்தான், அம்மா பூங்கா அருகே 22.6 ஏக்கர் இடத்தில் 345 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசின் பங்களிப்பில் மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மருத்துவக் கல்லூரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 1ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், அந்த இடத்தை ஆட்சியர் வீரராகவராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மணிகண்டன், சதன் பிரபாகர், நடிகர் கருணாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாா்ச் 1ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மூத்த அமைச்சா்கள் பங்கேற்கின்றனா். மேலும், மருத்துக் கல்லூரி மாதிரியையும், மாவட்ட துறைகளின் வளா்ச்சியையும் விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெறவுள்ளது.