ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும் என உறுதி தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் எனவும் கூறினார்.
ஸ்டாலின் ஐநா சபைக்கு பேச அழைக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, முதலில் அவர் ஐநா சபையில் பேசட்டும். பிறகு அதுபற்றி தான் கருத்து கூறுவதாக பதிலளித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளிக்கும்போது, ராமநாதபுர அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.