ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புதுக் கண்மாய் என்னும் இடத்தில் 1100 மிமீ உள்ள குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும், விரைந்து பழுது சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.