ETV Bharat / state

திருவாடானை அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய சகோதரர்கள் கைது - திருவாடானை

ராமநாதபுரம்: திருவாடானை அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய சகோதரர்களிடம் 3 லிட்டர் கள்ளச் சாராயம், 25 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்து அவர்களை நேற்று (ஜூன் 12) கைதுசெய்தனர்.

திருவாடானை அருகே 3லி கள்ளச்சாராயம், 25லி சாராய ஊறல் பறிமுதல்

author img

By

Published : Jun 13, 2021, 4:20 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆண்டி வயல் பகுதியில், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருவாடானை காவல் ஆய்வாளர் பாலசிங்கம் தலைமையிலான காவலர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியிலுள்ள கூத்த பெருமாள் என்பவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது அந்த வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த சகோதரர்களான கூத்த பெருமாள், மகாலிங்கம் ஆகிய இரண்டு பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து மூன்று லிட்டர் கள்ளச்சாராயம், 25 லிட்டர் சாராய ஊறல், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட தளவாட சாமான்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.