தமிழ்நாடு அரசு காவல் துறையினரின் பயன்பாட்டுக்கென உடலில் அணியும், நவீன ரக கேமராக்களை வழங்கிவருகிறது. இந்தக் கேமராக்களின் உதவியுடன் காவல் துறையினர், தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது சட்டையில் மாட்டிக்கொண்டு வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவற்றைப் பதிவுசெய்யலாம்.
வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர்செய்தல் போன்ற காவல் துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில் ராமநாதபுரம் காவலர்களுக்கு முதற்கட்டமாக உடலில் அணியும் 21 நவீன கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். மாவட்டத்தில் ஏழு உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 11 காவல் நிலையங்ளுக்கு தலா ஒரு கேமரா வீதம் மொத்தம் 21 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
![திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-03-police-secret-camera-sp-present-vis-scr-pic-tn10018_18022021160243_1802f_1613644363_220.jpg)
இதேபோன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நகர காவல் நிலையங்களுக்கு தலா மூன்று கேமராக்கள் வழங்கினார்.
இதையும் படிங்க: EXCLUSIVE: 'தலைசிறந்த அலுவலர்களை உருவாக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி'