ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள இரட்டைதழை தெற்கு கடற்கரை பகுதியில் துறைமுகத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உருளை அமைப்பில் இருக்கும கருப்பு மிதவை கரை ஒதுங்கியது.
இதுகுறித்த தகவலை மீனவர்கள் கடலோர காவல் துறைக்கு அளித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற கடலோர காவல் துறையினர் அந்த மிதவையை கைப்பற்றி, அந்த மிதவை அங்கு காற்றின் வேகத்தில் வந்தத்தா இல்லை வேறு எதும் காரணமா என வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.