ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சாமி திருக்கோயிலில் உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையும் படிங்க...கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!
பின்னர் செய்தியாலர்களைச் சந்தித்த அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த சட்டத்திருத்தம் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாது. அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிரதமர் திரும்ப பெறமாட்டார் என்றார்.