மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர்(103), ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் பூர்வீக வீட்டில் மகள், மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர், வயது முதிர்வின் காரணமாக இன்று (மார்ச் 7) இரவு ராமேஸ்வரத்திலுள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார். இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.
பூர்வீக வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலாம் ஹவுஸில், கலாமின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள், ஏவுகணை மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளதை, முகமது முத்து மீரா மரைக்காயரின் மகன், மகள், பேரன்களே பராமரித்து வருகின்றனர்.
கலாம் உயிருடன் இருக்கும்போது தனது மூத்த சகோதரரைச் சந்திக்க ராமேஸ்வரத்துக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அண்ணன் மீது கலாம் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்கள் அறிமுகம்