ராமநாதபுரம்: மீனவர்களைப் பாதிக்கக்கூடிய வகையில், ஒன்றிய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள 2021 மீன்வள மசோதாவைக் கண்டித்தும்,
அதனை ரத்து செய்யக்கோரியும், மசோதா நகல்களைக் கிழித்தெறிந்து ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகப்பகுதியில் உள்ள கடலில் இறங்கி தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்விவகாரத்தில் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புகளும் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது மீனவர்களுக்கு ஆதரவாக ஏஐடியூசி (All India Trade Union Congress) அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஏஐடியூசி அமைப்பினரின் கோரிக்கைகள்
'ஒன்றிய, மாநில அரசுகள் தமிழ்நாடு மீனவர்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக கொண்டு வரக்கூடாது.
புதிதாக ஏதேனும் திட்டத்தைக்கொண்டு வரும்போதே சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தி, அதில் இருக்கக்கூடிய சாதகம் என்ன, பாதகம் என்ன என்பதை எல்லாம் அவரிடம் தெரிவித்துதான் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
அதேபோன்று தான் தற்பொழுது மீனவர்களுக்காக கொண்டுவரவுள்ள, இந்த புதிய மீன்பிடி மசோதா குறித்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மீனவர்களையும் ஒரு குழு நியமனம் செய்து, அந்த குழுக்கள் மூலம் புதிய சட்டத்தை ஆராய்ந்து கொண்டுவர வேண்டும்' என ஏஐடியூசி அமைப்பினர் கூறினர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பெகாசஸை பயன்படுத்திய மோடி, அமித்ஷா- ராகுல் குற்றச்சாட்டு