ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே ஐஎன்எஸ் பருந்து தளத்தில் மேம்பட்ட இலகு ரக எம்கே 3 (MK 3) ஹெலிகாப்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் உச்சிபுளியில் அமைந்துள்ள INS பருந்து இந்திய கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா, ஐஎன்எஸ் பருந்துவின் சிவில் பிரமுகர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் முன்னிலையில் தண்ணீரைப் பீச்சியடித்து வணக்கம் செலுத்தப்பட்டு வரவேற்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இரவும், பகலும் பயன்படுத்த உதவும்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. கடற்படை கப்பல்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து இயக்கக்கூடியதாகும். மேலும், ஹெலிகாப்டர் ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
ஹெலிகாப்டரில் அதிநவீன கடல்சார் ரோந்து ராடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் பேலோட் உள்ளதால் இது கண்காணிப்புத் திறனை மேம்படுத்துகிறது. இந்த திறன்கள் இந்திய கடற்படைக்கு அதன் செயல்பாட்டுக் கேன்வாஸை மேலும் விரிவுபடுத்தவும், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நீர்நிலைகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பைப் பராமரிக்கவும் உதவும்.
இதையும் படிங்க: ரயில் குளிர்சாதனப் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்