ராமநாதபுரம்: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக போட்டியிடும் தொகுதிகள், அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மணிகண்டனின் ஆதரவாளர்கள் ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ராமநாதபுரம் தொகுதியானது சிறப்புவாய்ந்த தொகுதி, இந்தத் தொகுதியில் அதிமுக வென்றால்தான் ஆட்சி அமையும் என்பது ஐதிகமாக உள்ளதாகவும், அதிமுக தலைமை மறுபரிசீலனை செய்து தொகுதியை அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய எம்எல்ஏ மணிகண்டனுக்கு மீண்டும் தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜகவின் வேட்பாளருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், தங்களுடைய அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை அரண்மனை முன்பாக தீயிட்டுக் கொளுத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...Election Updates: மார்ச் 14 முதல் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை