ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயராம், வியாபாரத்திற்காக பாம்பன் பகுதியில் மீன் எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை காலை தேவக்கோட்டைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, மண்டபம் களஞ்சியம் கோயில் பகுதியில் அவர் வந்துகொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து செய்தித்தாள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மதுரை வாகன டிரைவர் மாரியப்பனும், ஜெயராமனும் படுகாயமடைந்தனர்.
விபத்தில், சிக்கிய இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மண்டபம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து காவலர் மீது மின்னல் வேகத்தில் மோதிய லாரி: வாகனத்தை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்