ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிமுத்து-அனுப்பிரியா தம்பதி. இவர்களுடைய எட்டு வயது மகள் சத்யபிரியா மூன்றாம் வகுப்பு படித்துவந்தார்.
சத்யபிரியாவும் அவரது தாயார் அனுப்பிரியாவும் குளிப்பதற்காக கமுதி அருகே உள்ள கண்மாய்க்குச் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அனுப்பிரியாவை மீட்டனர். இருப்பினும், சிறுமி சத்யபிரியா தண்ணீரில் மூழ்கி காணாமல்போனதால் அவரை மீட்க முடியவில்லை.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் கமுதி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவம் இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் காணாமல்போன சத்யபிரியாவை கண்மாயிலிருந்து சடலமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவிலாங்குளம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி குழந்தைகள் உயிரிழப்பு !