ETV Bharat / state

தனுஷ்கோடிக்கு கடத்திச்செல்லப்பட்ட 672 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது - ramanathapuram liqour bottle seized

ராமநாதபுரம்: ஆம்பி வேன் மூலம் தனுஷ்கோடிக்கு கடத்திச்செல்லப்பட்ட 672 மது பாட்டில்களை பறிமுதல்செய்த காவல் துறையினர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

ramanthapuram liqour bottles seized
ramanthapuram liqour bottles seized
author img

By

Published : Feb 4, 2020, 9:15 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு பலமுரை புகார் சென்றுள்ளது.

இதனடிப்படையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வாளர் திலகராணி தலைமையிலான காவல் துறையினர் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக ஆம்னி காரில் வந்த நான்கு பேர் காவல் துறையினரைக் கண்டதும் ஓட்டமெடுத்தனர். அவர்களை விடாமல் துரத்திச் சென்ற காவல் துறையினர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

தொடர்ந்து, ஆம்னி காரை சோதனையிட்டபோது அதில் 672 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மதுபாட்டில்களையும், ஆம்னி காரையும் பறிமுதல்செய்த காவல் துறையினர் சிக்கியவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஆம்பி காரை ஓட்ட வந்தவர் ராமேஸ்வரம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த காட்டு ராஜா என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாரி, மலைச்சாமி, நேதாஜி ஆகிய மூவரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க : ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை: இருவர் கைது

Intro:இராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட 672 மது பாட்டில்கள் பறிமுதல்.Body:இராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக பலமுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது. இதனடிப்படையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் இன்று ஆய்வாளர் திலகராணி தலைமையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆம்னி காரில் வந்த நால்வரும் போலீசாரை கண்டதும் வாகனத்தை விட்டு தப்பி ஓடினர்.

பின்னர் காவல்துறையினர் தப்பியோடிவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து ஆம்னி காரை சோதனையிட்ட போது அட்டைப் பெட்டிகளில் 672 மது பாட்டில்களை அதில் இருப்பது தெரியவந்தது. பின்னர் மது பாட்டில்களையும், ஆம்னி காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததனர். விசாரணையில் ஆம்னி காரை ஓட்டி வந்தவர் ராமேஸ்வரம் மருதுபாண்டியர் நகரைச் சார்ந்த காட்டு ராஜா என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய ராமேசுவரத்தைச் சேர்ந்த மாரி, மலைச்சாமி, நேதாஜி ஆகிய மூவரை ராமேசுவரம் காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.