தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 1328 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது ராமநாதபுரத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. முன்னதாக வங்கி பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ டாக்டர்கள்