ETV Bharat / state

30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - மாவட்ட ஆட்சியர் சந்திரகலா - etv bharat

ராமநாதபுரத்தில் கடந்த வருடம் 30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா
மாவட்ட ஆட்சியர் சந்திரகலா
author img

By

Published : Aug 17, 2021, 7:42 AM IST

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் மட்டும் 6 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. கடந்த வருடம் 30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த வாகனத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பான வசனங்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒலிபெருக்கி மூலம் குழந்தைத் திருமணம் என தெரிந்தால் அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி எண் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.