ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திங்கள்கிழமையன்று, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட பத்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச்.17) பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன், முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜி.முனியசாமி, திருவாடனை அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து என 20 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதுவரை மொத்தமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.