ராமநாதபுரம் மாவட்டம் காடுங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று (செப்.28) மாலை முதல் காரங்காடு பகுதியை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது காரங்காடு கடற்கரை அருகே உப்பு நீரை குடிநீராக்கும் அறையில் 93 மஞ்சள் மூட்டைகள் பதுங்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர் இன்று (செப்.29) அதிகாலை 4 மணியளவில் மஞ்சள் மூட்டைகளை கடற்கரை மார்க்கமாக கடத்த முயன்றபோது காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
இதில் கடத்த இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து, ஒரு மூட்டையில் 25 கிலோ வீதம் 2 ஆயிரத்து 325 கிலோ மஞ்சளை க்யூ பிரிவு காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சந்தனமரங்களை வெட்டிய இரண்டு பேர் கைது