ETV Bharat / state

இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக வந்த 14 பேர் - ராமநாதபுரம் போலீசார் விசாரணை - Ramanathapuram district news

இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கள்ளத்தனமாக 14 பேரை படகில் அழைத்து வந்தவர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
author img

By

Published : Sep 18, 2021, 4:58 PM IST

ராமநாதபுரம்: மண்டபம் அடுத்த மரக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரசூல், சதாம், அப்துல் முகைதீன். இவர்கள் இலங்கையிலிருந்து 14 பேரை கள்ளத்தனமாக படகில் கடந்த ஜுன் 19ஆம் தேதி ஏற்றி வந்தனர். மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தில் இறக்கிவிடப்பட்ட இவர்கள், அங்கிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து கர்நாடக மாநில காவல் துறையினர் வாகன சோதனையில் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் தாங்கள் கள்ளத்தனமாக படகில் இலங்கையில் இருந்து வந்ததாக கூறியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 52 பேர் கள்ளத்தனமாக இலங்கையிலிருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்றும், எந்த நோக்கத்தோடு வந்தார்கள் எனவும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாதி மோதல்... பழிக்குப்பழி... தொடர் கொலை: 8 எஸ்.பி.க்கள் குவிப்பு - நெல்லையில் திக்... திக்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.