ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 206 ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்களுடன் கூடிய இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஏழு தையல் இயந்திரங்கள், ஐந்து பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உதவிப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராமநாதபுரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இன்று மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 206 ரூபாய் மதிப்பீட்டில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதுவரை ராமநாதபுரத்தில் ஏழாயிரத்து 447 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
140 பேரின் இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அரசு அலுவலர்களை பொருத்தவரையில் இதுவரை 980க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும், சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியும் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாய கூலியைவிட குறைவாக இருக்கும் 100 நாள் வேலை ஊதியம்!