ETV Bharat / state

வயல் வேலைக்கு சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்பு! - pudukottai News Today

வல்லத்திராகோட்டை அருகே வயல் வேலைக்கு சென்ற பெண் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயல் வேலைக்கு சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்பு

author img

By

Published : Feb 4, 2023, 8:57 AM IST

வயல் வேலைக்கு சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திரா கோட்டை ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் அரங்கன் என்பவரது மனைவி சிட்டு (55). இவர் பாலக்குடிப்பட்டி கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை 6:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வயல் பகுதியின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து சிட்டுவின் மேல் விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து சிட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பின் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடிச் சென்று வயல்வெளியில் பார்த்தபோது சடலமாக கிடந்த சிட்டுவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவரது சடலத்தை மீட்ட அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தும், வருவாய் துறையினர் மற்றும் மின்துறையினர் நடந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து இருப்பதாக மின்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், மின்துறையினரின் அலட்சியத்தால் தான் சிட்டு உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.