ETV Bharat / state

குமாரவயலூர் கிராமத்தை திருச்சி மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்! - TRICHY

குமாரவயலூர் கிராமத்தை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல்
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 5:19 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள 16 மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் உட்பட்ட குமாரவயலூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய, விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வரும் இந்த ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், கிராம மக்களின் பொருளாதாரம் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகும். எனவே விவசாயத்தை மையமாக வைத்து செயல்படும் ஊராட்சிகளை இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவ்வாறு மீறி இணைக்கும் பட்சத்தில் திருச்சிக்கு வருகிற 28 ஆம் தேதி சராணர் இயக்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தர உள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.