ETV Bharat / state

கூலி வேலை செய்யும் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்!

author img

By

Published : Jul 2, 2019, 5:30 PM IST

புதுக்கோட்டை: பொன்பேத்தி, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிரமங்களில் குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடிநீர்

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் சென்னையில் குடம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பொன்பேத்தி, கொத்தமங்கலம், பாண்டிமனை ஆகிய ஊர்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு மாதமாகியும் அதை சரிசெய்யப்படாமல், அதிலிருந்து தண்ணீர் கண்மாயில் வீணாக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், அறந்தாங்கி கூட்டு குடிநீர் செயற்பொறியாளர்களிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

பொன்பேத்தி, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிரமங்களில் குடிநீர் வீணாகும் காட்சிகள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை மட்டுமே குடிநீர் வருகிறது. தற்போது அதுவும் வருவதில்லை. சிறிது கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது இந்த நிலையில் எப்போதாவது வருகின்ற தண்ணீரும் தற்போது குழாய்கள் வழியாக உடைத்துக்கொண்டு வீணாய்போகிறது . கூலி வேலை செய்யும் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து குழாய்களை சரி செய்துத்தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு புறம் சாலைகளில் குழாய்கள் உடைத்துக் கொண்டு தண்ணீர் வீணாய் வெளியேறிக் கொண்டிருக்கிறதும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது..Body:
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் சென்னையில் குடம் ரூபாய் 20 விற்க்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பொன்பேத்தி, கொத்தமங்கலம், பாண்டிமனை ஆகிய ஊர்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு மாதம் ஆகியும் அதை பராமரிக்காமல் அந்த தண்ணீர் கண்மாயில் பாய்கின்றது பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அறந்தாங்கி கூட்டு குடிநீர் செயற்பொறியாளர் களிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அங்குள்ள கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது ஒரு குடம் தண்ணீர் ஏழு ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது இந்நிலையில் ஊருக்கு வரும் தண்ணீரும் எப்படி உடைத்துக்கொண்டு செல்வது மிகவும் வேதனை கூறியதாக இருக்கிறது எனவும், இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

மாதத்திற்கு இரண்டு முறை மூன்று முறை தான் குடிதண்ணீர் வருகிறது தற்போது அதுவும் வருவதில்லை சில கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது இந்த நிலையில் எப்பயாவது வருகின்ற தண்ணீரும் தற்போது குழாய்கள் வழியாக உடைத்துக்கொண்டு வீணாய் போகிறது இதுதொடர்பாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் இன்னும் சரி செய்யப்படவில்லை. கூலி வேலை செய்யும் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் குழாய்களை சரி செய்தது தர வேண்டும் என்று தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.