ETV Bharat / state

வாலிபால் நாயகன் வினித்திற்கு பாராட்டு விழா! - ஜெரோம் வினித்

புதுக்கோட்டை: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் வாலிபால் பிரிவில் இந்திய அணியின் தலைவராக விளையாடிய புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெரோம் வினித்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

Appreciation Ceremony
Appreciation Ceremony
author img

By

Published : Jan 20, 2020, 4:27 PM IST

கடந்த நவம்பர் மாதம் நேபாளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வாலிபால் பிரிவில் 8 நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியின் இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக புதுக்கோட்டை மாவட்டம்,கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெரோம் வினித் இந்திய அணியை வழிநடத்தினார்.

அதுமட்டுமின்றி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்து தெற்காசிய போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தினையும் பெற்று தந்தார். இதனையடுத்து ஜெரோம் வினித்துக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

வாலிபால் நாயகன் வினித்திற்கு பாராட்டு விழா

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வினித், ”இந்தியாவிற்காக விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கிரிக்கெட் அளவிற்கு மக்களிடம் வாலில்பால் வரவேற்பை பெறாததுக்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது. மாணவர்கள் ஆர்வத்துடன் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும். அதற்கு அனைத்து ஊர்களிலும் மைதானம் கட்டாயம் அமைக்க வேண்டும்.

இப்போது இருக்கும் குழந்தைகளை விளையாடுவதற்கு பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. கல்வியை சுமையாக்கி வீட்டுக்குள்ளேயே வைத்துவிடுகின்றனர் . விளையாட்டு என்பது கண்டிப்பாக வாழ்க்கைக்கு தேவை” என்றார்.

இதையும் படிங்க:கொல்கத்தா கால்பந்து மைதானத்தில் சிஏஏவுக்கு எதிராக வலுப்பெற்ற போராட்டம்

Intro:தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால் பிரிவில் இந்திய அணியின் தலைவராக விளையாடிய புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெரோம் வினித் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு.Body: கடந்த நவம்பர் மாதம் நேபாலில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வாலிபால் பிரிவில் 8 நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியின் இறுதியில் இந்தியா, பாக்கிஸ்தான் அணிகள் விளையாடின. இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், கோட்டைக்காடை சேர்ந்த விவசாயி சார்லஸ் அவர்களது மகன் ஜெரோம்வினித் இடம் பெற்று, போட்டியில் வெற்றி பெற செய்து தெற்காசிய போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தினை பெற்று தந்தார்கள். தெற்காசிய போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தினை வென்ற ஜெரோம்வினித் அவர்களுக்கு இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் பிரிவில் கடற்கரை கையுந்துப் போட்டியில்; தங்கப் பதக்கம் வென்ற குழிபிறை இராமநாதசெட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன்பின்னர் அவர் தெரிவித்ததாவது,

இந்தியாவிற்காக விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் 14 பேர் விளையாடி வெற்றி பெற்றார்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கிரிக்கெட் அளவிற்கு வாலிபால் மக்களிடம் வரவேற்பை பெறாது அரசாங்கத்தை குறை கூற முடியாது. மாணவர்கள் ஆர்வத்துடன் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் அதற்கு அனைத்து ஊர்களிலும் மைதானம் கட்டாயம் அமைக்க வேண்டும். இப்போது இருக்கும் குழந்தைகளை விளையாடுவதற்கு பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை கல்வியை சுமையாகி வீட்டுக்குள்ளேயே வைத்து விடுகின்றனர் . விளையாட்டு என்பது கண்டிப்பாக வாழ்க்கைக்கு தேவை .ஏழை எளிய மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுப்பதற்காக அமைப்பை எதை வைத்து இருந்தேன் வரும் காலங்களில் இன்னும் அதை சிறப்பாக நடத்தி நிறைய வீரர் வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.