ETV Bharat / state

தக்காளி விலையை எப்படி குறைப்பது? - விக்கிரமராஜா பதில்

கரோனா காலத்தில் இருந்தது போன்று வேளாண் பொருட்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தாலே தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Commerce President Vikramaraja press meet
வணிக சங்க தலைவர் விக்ரமராஜா
author img

By

Published : Jul 15, 2023, 8:24 AM IST

Updated : Jul 15, 2023, 8:47 AM IST

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பு

புதுக்கோட்டை: சமீப காலமாக தக்காளி, பருப்பு உள்ளிட்ட வேளாண் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய விக்கிரமராஜா, "கரோனா காலத்தில் இருந்தது போன்று, வேளாண் பொருட்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய பணிகளை சரி வர செய்யவில்லை. குறிப்பாக, அவர்களது தொகுதி வரையறையை தெரியாத எம்பிக்கள் அதிகம் பேர் உள்ளனர். இது போன்ற எம்பிக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதற்கு வணிகர் சங்க பேரமைப்பு தேர்தலில் நிற்காமல் முயற்சி எடுக்கும். நேரடியாக தேர்தலில் பணியாளர் சங்க பேரமைப்பு போட்டியிடாது. ஆனால், மறைமுகமாக யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வணிகர்கள் இருப்பார்கள்.

லூலு மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசிடம் பொய்யான தகவல்களைக் கூறி, தங்களுடைய கிளைகளை திறந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்று அரசிடம் உத்தரவாதம் அளிக்கின்றனர். ஆனால், தற்போதைய நிலையை அரசு ஆய்வு செய்தால் வேலைவாய்ப்பில் 5 சதவீத தமிழர்கள் கூட அதில் இல்லை.

இன்றைய தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வணிகர்கள் வேலை வாய்ப்பு கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். ஆனால், இளைஞர்கள் முன் வரவில்லை. மேலும், ஜிஎஸ்டி முறைகேடு செய்யும் வணிகர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனை மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளோம்.

தக்காளி உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வணிகர்கள் காரணம் கிடையாது. உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தக்காளி குறைவான விலை விற்கும் நேரங்களில், மாநில அரசே நேரடியாக விவசாயிடமிருந்து விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்து, அதனை பவுடர் ஆக்கி விற்பனை செய்தால் வணிகர்கள் விற்பனை செய்ய தயாராக உள்ளோம். இது போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

தட்டுப்பாடு ஏற்படும் நிலையை அரசு முன்பே கணக்கிட்டு, அதற்கு உண்டான முன்னேற்பாடு பணிகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பொருட்களை பதுக்கி வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டாவது முறையாக மின்சார கட்டணம் உயர்த்தியதால் வணிகர்களுக்கு மட்டும் பாதிப்பு கிடையாது.

ஜிஎஸ்டி வரி வசூல் என்பது மிகப்பெரிய நெருக்கடியை வியாபாரிகளுக்கு தந்து வருகிறது. மத்திய அரசு ஜிஎஸ்டியை அமலாக்கத் துறையோடு இணைத்து வருகிறார்கள். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற தகவல் தற்போது வந்துள்ளது. கொள்ளை அடிப்பவர்களுக்கு வேண்டுமானால் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம். ஆனால், வணிகர்களிடம் அது போன்ற நிலை இருக்காது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டன - லஞ்ச ஒழிப்புத்துறையின் தகவலால் சர்ச்சை!

Last Updated : Jul 15, 2023, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.