ETV Bharat / state

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கில் இருவர் கைது.. குற்றவாளி சிக்கியது எப்படி?

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Ponnamaravathi
பொன்னமராவதி தாய் - மகன் கொலை வழக்கு
author img

By

Published : May 3, 2023, 11:45 AM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் செட்டிநாடு கன்ஸ்ட்ரக்சன் எனும்‌ பெயரில் கட்டுமான நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில், இவருடைய நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு அவரும் அவருடைய தாயாருமான சிகப்பு என்பவரும் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் பொன்னமராவதி பகுதியையே உலுக்கியது. இந்நிலையில் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா என்ற பல கோணத்தில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில், சுமார் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் சந்தேகத்திற்கு இடமாக இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் கல்லங்களாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி (33) மற்றும் தேவகோட்டை அருகே மாவலி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (36) ஆகியோர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியர் பழனியப்பன் மற்றும் அவரது அம்மா சிகப்பி ஆகியோரை நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்ததை கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கூறுகையில், "கொலை செய்தவர்கள் இன்ஜினியர் பழனியப்பனிடம் வேலை செய்தவர்கள். அதன் பின் அவர்கள வேலையிலிருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர்களிடன் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தாலும், பழனியப்பனிடம் அதிக பணம் இருக்கும் என்பதை மனதில் வைத்தும் இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன் பிறகு கொலை நடப்பதற்கு முன்னர் வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்காக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிக பணம் புழங்குவதை நோட்டம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் இதற்கு முன்பு இரண்டு முறை திருட முயற்சி செய்தது தோற்றதாகவும் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் டிச. 23 ஆம் தேதி திட்டமிட்ட படி திருடிவிட்டு, மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் கொலை செய்தோம்" எனக் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது 4 மாதங்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பொன்னமராவதி பகுதியில் இரட்டை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தீவிர தேடல் வேட்டைக்கு பிறகு அந்த குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் தனிப்படை போலீசார் ஆகியோரை இந்த வழக்கில் சிறப்பாக செயல் பட்டதற்காக பொதுமக்கள் பாராட்டினர். இதைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவோம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: The Kerala Story: தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் திரையிட வேண்டாம்: உளவுத்துறை வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.