புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சுகாதாரப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில், திருச்சி மக்களை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," கரோனாவால் இதுவரை தமிழ்நாட்டில் பட்டினி சாவு கிடையாது. மக்களுக்கு கொடுக்கப்படும் 1000 ரூபாய் பத்தாது.
மக்களுக்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஊரடங்குத் தளர்வினால், மக்களின் பிரச்னை விரைவில் தீராது. எம்.பி.பண்ட் - ஐ இரண்டு ஆண்டுக்கு நிறுத்தியது தவறு. 500 கோடி ரூபாயை எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு ஒதுக்காமல் நீக்கியது.
ராணுவத்திற்குப் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதன் சிறு தொகையை எம்.பி-க்களுக்காக ஒதுக்க அரசு மறுக்கிறது. மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அரசுக்கு வருமானம் வர, பல்வேறு வழி உண்டு. ஆனால், மக்களுக்கு வருமானம் கிடைக்க என்ன செய்வார்கள்? மக்களுக்கு தேவையானதை அரசாங்கம் செய்யக் கடமைப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசை புறக்கணிக்கிறது என்பதுதான் உண்மை. இதுவரை எந்த உதவியும் மத்திய அரசு மக்களுக்கோ, மாநில அரசுக்கோ செய்யவில்லை. அனைத்து நிதியையும் வைத்துக் கொண்டும், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? 50,000 கோடியை வீணாக செலவு செய்யும் மத்திய அரசு மக்களுக்காக ஒதுக்கக்கூடாதா?
கரோனாவோடு மக்கள் பழகிக்க வேண்டும் என்றால் அரசாங்கம் தேவையில்லையே. கரோனா பரவாமல் இருக்க பொது மக்கள் விழித்திருப்பது போல அரசும் விழித்திருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, அது அவரது சொந்தக் கருத்து, எனது கருத்து மதுக் கடைகளை திறக்கக்கூடாது. ஒரே கட்சியில், இரு வேறுபட்ட கருத்துகள் இருக்கக்கூடாதா? என்று பதிலளித்தார்.
மேலும், விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரிக்கப்பட்ட சம்பவம் காட்டு மிராண்டித் தனமானது. அவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். மதுவினால் வரும் வருவாயினால் தான் அரசின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்றால், கள்ள நோட்டுகளாக முடியும் வேறு வழியைக் கண்டுபிடித்து தான் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்'- நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்