ETV Bharat / state

பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கப் போகிறது - திருநாவுக்கரசர் சாடல் - திமுக -காங்கிரஸ் கூட்டணி பிரச்னை விவகாரம்

புதுக்கோட்டை: பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்துவரும் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunavukkarasar
thirunavukkarasar
author img

By

Published : Jan 20, 2020, 7:51 AM IST

புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஏற்பட்ட பிரச்னைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை இல்லை

திமுக-காங்கிரஸ் பிரச்சனை குறித்து கருத்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பாஜகவுடன் ஒட்டிக்கொண்டு உள்ளதா? அல்லது உடைந்துவிட்டதா? என்பதைக் கூற வேண்டும். பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்யும் அதிமுக, அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது. அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை ஜெயக்குமார் யோசிக்கட்டும்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், ரஜினி குறித்த கேள்விக்கு, துக்ளக் விழாவில் ரஜினி கூறிய கருத்து என்னை பொறுத்தவரை விமர்சனம் செய்யும்படியாக இல்லை அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

Intro: பாஜக மூழ்கும் படகு அதில் ஏறி அதிமுக பயணம் செய்து வருகிறது பாஜக உடன் சேர்ந்து அதிமுகவும் அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி.Body:அவர் தெரிவித்ததாவது,

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை அதனால் இதில் தமிழகத்தில் உள்ள தலைமையோ எம்பிக்கள் எம்எல்ஏக்களோ யாரும் சில இடங்களில் தலையிடவில்லை அதனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சில இடங்களில் முடிவெடுத்து அவர்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என பார்த்து வாக்களித்துள்ளனர், உள்ளாட்சித் தேர்தலில் சிறுசிறு பிரச்சினைகளால் திமுக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினால் அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது திமுக காங்கிரஸ் கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம், திமுக காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து செயல்பட வேண்டும் என்றே காங்கிரஸில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பினர் தற்போது எழுந்த திமுக-காங்கிரஸ் பிரச்சனைக்கு குறித்து கருத்துக் கூறும் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜகவுடன் ஒட்டிக்கொண்டு உள்ளதா அல்லது உடைந்து விட்டதா என்பதை கூற வேண்டும் பாஜக மூழ்கும் படகு அதில் ஏறி அதிமுக பயணம் செய்து வருகிறது பாஜக உடன் சேர்ந்து அதிமுகவும் அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது, அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதே ஜெயக்குமார் யோசிக்கட்டும், துக்ளக் விழாவில் ரஜினி கூறிய கருத்து என்னை பொறுத்தவரை விமர்சனம் செய்யும் படியாக இல்லை அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.