புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தாக்கம் அதிகரித்துவருகிறது. தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,299ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிகர்கள் இன்று (ஜூலை24 ) முதல் 30ஆம் தேதிவரை கடையடைப்பு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதேபோல இன்று புதுக்கோட்டையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், மதுபானக் கடைகள் போன்றவை வழக்கம்போல இயங்குகின்றன.
சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் 80 விழுக்காடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருள்களான பால், மருந்தகங்கள், காய்கறி மார்க்கெட் ஆகியவையும் வழக்கம்போல் இயங்குகின்றன.
இதையும் படிங்க... கோவிட்19 சிகிச்சைக்கு கூடுதல், படுக்கை வசதிகள் தயார்- மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தகவல்